Site icon SeithiAlai

காதலை தூக்கிச்சாப்பிட்ட காமம்… ஜி.வி பிரகாஷ்- திவ்யபாரதியின் ‘பேச்சிலர்’ ட்ரெய்லர் வெளியீடு!!

ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் டிரெய்லர் காதலும் காமமுமாக வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் டிசம்பர் 9 ஆம் தேதி வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படமும், ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் உதவி இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள ‘பேச்சிலர்’ படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாகவுள்ளன.

இதில், ‘பேச்சிலர்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் ட்ரெய்லரை வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கவனம் ஈர்க்கும் ஹம்மிங் பின்னணியில் ஓடும் ட்ரெய்லர் முழுக்க முழுக்க காதலாய் நிறைந்துள்ளது. குறிப்பாக, ஜி.வி பிரகாஷ் திவ்ய பாரதியை வெறித்தனமாக காதலிக்கும் காதலராய் நடித்திருக்கிறார்.

பொம்பள புள்ளைய என்ன பண்ணிருக்கான் பாரு என்ற வசனத்தின் மூலம் இந்த திரைப்படம் குடும்ப வன்முறை குறித்து பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது என ட்ரைலர் வெளிப்படுத்தியுள்ளது.

Exit mobile version