எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… புதிய புகைப்படத்தை பதிவிட்ட பார்வதி… அலறிய ரசிகர்கள்

தமிழ் யூடியூப் சேனல்களில் பணியாற்றி பிரபலமானவர் விஜே பார்வதி. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தான் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


விஜே பார்வதி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் விஜே பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர். அதிக நெகட்டிவ் கமெண்டுகளும் இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் பார்வதி போட்டியில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.

போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட பிறகு தற்போது பார்வதி தனது புதிய புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் உடல் மெலிந்து, டேன் ஆக காணப்படுகிறார். இதுகுறித்து அவர் இதுதான் உண்மை இந்த கருமை நிறமும் உண்மை நான் உண்மையிலேயே ஒரு சர்வைவர் தான் என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் விரைவில் உடல் நலனை சரி செய்து கொண்டு மீண்டு வருமாறு தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version