சிபிராஜ் நடிப்பில் 2 நாட்களுக்கு முன் வெளிவந்துள்ள ‘மாயோன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’மாயோனே மணிவண்ணா’ பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிஷோர் இயக்கத்தில் இளையராஜா பின்னணி இசையில் வெளிவந்துள்ள திரைப்படம் மாயோன். இப்படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் தலைமையில் இயங்கும் அந்த குழுவில் சிபிராஜ், ஹரிஷ் பெரடி இருவரும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கோயிலில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்கு விற்க முயற்சிக்கின்றனர். இறுதியில் நடக்கும் ட்விஸ்ட்தான் படத்தின் கதை.
இவ்வாறு புதையலை கண்டுபிடிக்க செல்லும் போது வண்டு வடிவிலான ட்ரோனை பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். அந்த ட்ரோன் கோயிலுக்கு உள்ளே சென்று எவ்வாறு புதையலை கண்டுபிடிக்கிறது என்பதை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். ட்ரோன் செல்லும்போது வரும் ‘மாயோனே மணிவண்ணா’ பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பாடலை ரஞ்சனி,காயத்ரி பாடியுள்ளனர். ஒளிப்பதிவு ராம்பிரசாத். அந்த பாடல் இது உங்களுக்காக…
-பா.ஈ.பரசுராமன்.