‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் வீடியோ

‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் வீடியோ வெளியாகியுள்ளது.

தி லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ’தி லெஜண்ட்’ திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாக இருக்கிறது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜெ.டி.ஜெர்ரி இயக்கியுள்ளார்.

படத்தில் நாசர், விஜயகுமார்,பிரபு, யோகி பாபு, ஊர்வசி ரவுத்தலா, கீதிகா, மறைந்த சின்னக் கலைவாணர் விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, கபிலன், பா.விஜய், ஸ்நேகன், மதன் கார்கி உள்ளிட்டோர் பாடல் எழுதியுள்ளனர். இந்த நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் வீடியோவை தனது ட்விட்டர் பக்கதில் தி லெஜண்ட் சரவணன் பகிர்ந்துள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version