SeithiAlai

படுக்க அறைக்கு செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை பிரபல நடிகை பொளேர்

படுக்கை அறைக்குச் செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை என்று நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத் 2002ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர். 2004ம் ஆண்டு வெளியான மர்டர் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகர்களின் படுக்கை அறைக்குச் செல்லாததால் பெரிய ஹீரோக்கள் என்னுடன் நடிக்கவில்லை என்று பேட்டியளித்துள்ளார். இருப்பினும் பெயரை குறிப்பிடவில்லை.

Mallika Sherawat Gets Tear Gassed During A Robbery Attempt

மல்லிகா அளித்துள்ள பேட்டியில்: கட்டுப்படுத்த முடியும் என்ற நடிகையைதான் ஹீரோக்கள் விரும்புவார்கள். எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்துகொள்கிறாரோ அவருக்கே வாய்ப்பு. நான் அப்படி இல்லை.என்னுடைய ஆளுமை அப்படி இல்லை. வேறொருவரின் பாலியல் ஆசைக்கு நான் ஆளாக விரும்பவில்லை.

உட்காரு,எழு என்று ஹீரோக்கள் சொன்னால் செய்ய வேண்டும். ஒரு ஹீரோ உங்களை நள்ளிரவில் படுக்கைக்கு அழைத்தால் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களின் நட்பு வட்டாரத்தில் இருப்பீர்கள். இல்லையேல் நீங்கள் படத்திலிருந்து தூக்கி வீசப்படுவீர்கள். அட்ஜெட் பண்ணிக்கொண்டு செல்வது எனக்குப் பிடிக்காது. நான் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முயற்சி செய்தேன். அனைவரையும் போன்று நானும் சில தவறுகள் செய்தேன். சில கதாபாத்திரங்கள் நன்றாக அமைந்தது. சில நன்றாக அமையவில்லை. ஆனால்,என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது என்று கூறினார். இந்த பேட்டி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version