வைரலாகும் ’லைகர்’ படத்தின் வீடியோ

விஜய் தேவரகொண்டா பதிவிட்ட லைகர் படத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் லைகர். இப்படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்டு 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தற்காப்புக்கலை மற்றும் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 4:00 மணிக்கு லைகர் படத்தின் பாடல் வெளியாகும் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version