SeithiAlai

புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது அறிவிப்பு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Puneeth Rajkumar: Reaching People beyond Country- Language 'Prince';  Special Feather Available for Picture | High Commission of India in Sri  Lanka picks Puneeth Rajkumar starring Raajakumara | PiPa News

கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த புனித் ராஜ்குமார் கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பு என்று செல்லமாக அழைப்பட்டு வந்த அவர், முதியோர் இல்லங்கள் & அனாதை ஆசிரமங்கள் நடத்தி வந்தார். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஹீரோவாகவே திகழ்ந்தார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். மேலும், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை அறிவித்துள்ளார். இந்த விருது வரும் நவம்பர் 1ம் தேதி வழங்கப்படும். இந்த அறிவிப்புக்கு கர்நாடக மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version