விருதுகளை அள்ளி குவித்த ’மாமனிதன்’ திரைப்படம்

தாகூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாமனிதன். இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்து இருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இயக்குநர் ஷங்கரும், சீனு ராமசாமியை அழைத்துப் பாராட்டினர்.

இந்த நிலையில், டோக்கியோ பட விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்றது. இதை தொடர்ந்து தாகூர் இண்டர்நேஷனல் பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது என அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். மேலும், சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த சாதனைக்கான விருது,விமர்சகர்கள் தேர்வு விருது என மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் வென்றுள்ளது என ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version