சமந்தாவை நேரில் பார்த்தால்… நாகசைதன்யாவின் ருசிகரமான பதில்! நீங்க வேற லெவல் சார்

நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த இந்த ஜோடி 2021ம் ஆண்டு அக்டோபரில் பிரியப்போவதாக இருவரும் தனித்தனியாக அறிவித்தனர். இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவர்கள் அதுபற்றிய காரணத்தை கூறவில்லை. இதையடுத்து, இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா என்ற படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நாகசைதன்யா நடித்துள்ளார்.

இப்படத்தின் புரோமோசன் வேலையில் ஈடுபட்டபோது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், நீங்கள் மறுபடியும் சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள்? அதற்கு, ஹாய் என்று சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன் என்று கூலாக பதில் அளித்தார். மேலும், தனது திருமண நாளை டாட்டூவாக  எனது கைகளில் வரைந்திருக்கிறேன். இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் பின் நாளில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றார். நீங்கள் டாட்டூவை மாற்றப்போகிறீர்களா?என்ற கேள்விக்கு, இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்றார்.

முன்னதாக, காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தாவிடம், மீண்டும் நாகசைதன்யாவையும், உங்களையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு அந்த அறைக்குள் கூர்மையான ஆயுதங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த மனநிலை பின்னாளில் மாறலாம் என்று பதிலளித்திருந்தார்.

Exit mobile version