ராதையாக மாறிய தர்ஷா… ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ!

இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தங்கள் வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை வேஷம் இட்டு, அவர்களது பாதத்தை அரிசி கோலமாவினால் வீடு முழுவதும் அலங்கரிக்க அந்த கண்ணனே வந்து ஆசிவழங்குவான் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும், இன்றைய தினம், பகவான் கிருஷ்ணனுக்கு பிடித்த வென்ணெய், சீடை, இனிப்பு பலகாரங்கள் வைத்தும் வழிபடுவர். இந்த நிலையில் நடிகை தர்ஷா ராதையாக வேடமிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சிநேகிதியே படத்தில் வரும்,

“கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்..

மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்!

கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்!

அவனை தேடி அவள், கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை! உயிரும் இருக்கும் மூச்சு இல்லை!

வந்த பாதை நினைவு இல்லை! போகும் பாதை புரியவில்லை!

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்

கண்ணா எங்கே சொல் சொல்

கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க”

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல் ராதையாகவே மாறி நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version