கண்ணீர் விட்டு கலங்கிய இயக்குநர் சீனுராமசாமி… காரணம் இவர்தான்!

’மாமனிதன்’ படம் குறித்து மதுரை முத்து பேசிய பேச்சைக் கேட்டு நானே கண்ணீர் விட்டேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரைமுத்து பேசிய வீடியோவை பதிவிட்டுள்ள அவர், “என் படம் பார்த்தால் கண்கள் சில இடங்களில் கலங்கும். ஆனால், உங்கள் பேச்சை கேட்டதும் நானறியாமல் என் கண்கள் கலங்கின. நகைச்சுவை திலகம் மதுரைமுத்து அவர்களே உங்கள் பேச்சால் அழுத முதல் ஆள் நான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ’மாமனிதன்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version