பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை. இவர் முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். மேலும், பீயிங் வுமன் (Being Women) என்னும் இணைய இதழையும் நடத்தி வந்தார். இந்த நிலையில்,சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்ட போலீச்சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதே தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தூரிகை எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version