VTK படத்திற்கு U/A சான்றிதழ்

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான்,சிம்பு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார்.

ஏழ்மையின் காரணமாக மும்பைக்கு பிழைக்கப் போகும் முத்து (சிம்பு) எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களுமே படத்தின் கதையாகும். செப்டம்பர் 15ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version