எம்.பி பதவி தரும் கட்சியில் இணைவேன் – சந்தானம்

ராஜ்யசபா எம்.பி பதவி தரும் கட்சியில் இணைவேன் … ” – என்று செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் சந்தானம் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், படத்தில் இடம்பெற்றுள்ள ‘சம்சா…’ பாடலுக்காக என்னை புல்லப்ஸ் எடுக்க சொன்னார்கள். பேருந்துக்குள்ளேயே எடுத்த பாடல் அது , பேருந்தின் கம்பியை பிடித்து தொங்கியபடி நடித்ததால் 2 நாட்கள் கை வலித்தது. படத்தின் இன்னொரு கதாநாயகன் சந்தோஷ் நாராயணன். அனைத்து பாடலும் கானா பாடலாக இடம்பெற்றுள்ளது. பாடல் எழுதிய கவிஞர்களின் பெயர்  கோளாறு, அசல் கோளாறு என்று தன்னுடைய பாணியில் நக்கல் அடித்தார். பின்னர் நடிகர் சந்தானத்திடம் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர்.

தனக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை  கொடுக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் அந்த கட்சிக்கு செல்ல தயார் என்றும் ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் எனவும் கிண்டலாக கூறினார். மேலும் உதயநிதியுடன் நடித்ததற்கும் அரசியலுக்கும் எந்த  சம்பந்தமும் இல்லை என்றும் சந்தானம் பதிலளித்தார். ” காமெடி எனக்கு சரியான பாதையாக தெரிவதால் காமெடி படங்களிலேயே நடிக்கலாம் ,  ஆக்சன் படங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாக ” சந்தானம் கூறினார்.  மேலும் மேடையில் பேசிய இயக்குநர் ஜான்சன் தான் எதற்குமே ஒர்த்… இல்லை என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் . இவ்வாறு பேசினால் படமும் ஒர்த்தாக இருக்காது  என ரசிகர்கள் முடிவு செய்து படம் பார்க்க வரமாட்டார்கள் என செய்தியாளர்கள் எச்சரித்தனர். அதற்கு  சற்றும் சளைக்காமல் இயக்குநர் ஜான்சன் ரசிகர்கள் படம் பார்க்க வராவிட்டாலும் தனக்கு கவலை இல்லை என கூறினார்.

Exit mobile version