இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 1 கோடி நிதியுதவி வழங்கிய படக்குழு….

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 1 கோடி நிதிஉதவி வழங்கினார் கமல்ஹாசன்.

கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா(கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன்), கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமலஹாசன் , விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டை கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் வழங்கினர்.இயக்குனர் சங்கத்தலைவர் ஆர். கே. செல்வமணி உடன் இருந்தார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என  இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.

படப்பிடிப்பில் நடந்த விபத்து கசப்பான பாடம் என்றும் சட்டதிட்டங்களின் படி இனிமேல் நடப்போம் என்று கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Exit mobile version