மாநாடு இரண்டாவது ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 4 ம் தேதி தீபாவளிக்கு அண்ணாத்தவுடன் ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பிறகு கடைசி நிமிடத்தில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த அரசியல், த்ரில்லர் படமான திரைப்படத்தில் சிம்பு – எஸ்ஜே சூர்யா இடையேயான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் நவம்பர் 25 ம் தேதி தியேட்டரில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் ட்ரைலரும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 18 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த மியூசிக் ஆல்பத்துடன் படத்தின் இரண்டாவது டிரைலரையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்சார் சான்றிற்காக மாநாடு படம் அனுப்பப்பட்டுள்ளது. சென்சார் போர்டு குழுவினர் இந்த வாரம் மாநாடு படத்தை பார்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version