விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்திருக்கும் இப்படத்துக்கு இசை அனிருத். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய நிலையில், அடுத்த வருட பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ளது.
Read more – நேபாள நாட்டில் நாடாளுமன்றம் கலைப்பு- அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்
மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழுக்கான தணிக்கை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடந்திருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்பது இடங்களை வெட்டி நீக்கினால் யு சான்றிதழ் பெறலாம். இல்லையெனில், யு/ஏ சான்று தான் கிடைக்குமென சென்சார் குழுவினர் தெரித்துள்ளனர்.