கமலுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா?

நடிகர் கமலின் ‘விக்ரம்’ படத்தில் பிரபுதேவா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் இதில் நடிக்கிறார். முதலில் ரஜினிக்கு என உருவாக்கப்பட்ட கதையை கமல் தயாரித்து ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக இருந்தது.

அது சில காரணங்களால் நடக்காமல் போக கமலுக்கு ஏற்றார்போல கதையில் மாற்றங்கள் செய்து லோகேஷ் படத்தை இயக்குகிறார். ‘விக்ரம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசை அனிருத். கடந்த மாதம் கமலின் பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில், கமலுக்கு வில்லனாக கதையில் பஹத் பாசிலை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது பஹத்துக்கு பதிலாக பிரபுதேவாவை வில்லனாக இறக்க பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறதாம்.

READ MORE- முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு. என்ன காரணம்?

‘காதலா காதலா’ படத்திற்கு பிறகு பிரவுதேவாவும் கமலும் ஒன்றிணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

Exit mobile version