பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அணைத்து மக்களுக்கு ஒரு முக்கிய பொழுதுபோக்கு பிக்பாஸ் தான். இந்த பிக்பாஸ் ஆரமித்ததிலிருந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தெலுகுவில் தற்போது இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் அதனை எட்டியுள்ளது. இந்த ஷோவ்வை ஜூனியர் என்.டி.ஆர், நானி போன்ற முன்னணி நட்சத்திரங்களை தொடர்ந்து தற்போது நாகர்ஜுனா தொகுத்துவருகிறார்.
வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் நபரின் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாகார்ஜூனா தன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவரும் வரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரின் மருமகள் சமந்தா அக்கினேனி அவர்கள் தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு அதாவது பிக்பாஸ் மூன்றாவது சீனில் நாகார்ஜூனா அவர்கள் சிறுது காலம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனபோது ரம்யா கிருஷ்ணன் அவர்கள் சில வாரங்கள் இதை தொகுத்து வாழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.