இதுவா பிரேக்கிங் செய்தி? தயாரிப்பாளரின் கோவம்!!

பிரேக்கிங் செய்தி என்பது தற்போது வளர்ந்து வரும் நிகழ்வுகளை குறிக்கிறது அல்லது பிரேக்கிங் செய்திகள் வழக்கமான செய்திகளை போல் அல்லாது திடீரென ஏற்படும் எதிர்பாராத அல்லது வழக்கத்திற்கு மாறாக நடைபெறும் செய்திகளை மக்களிடம் சேர்ப்பது என பொருள்படுகிறது.

பிரேக்கிங் என்பதற்கு நாம் அப்போதுதான் ஒரு செய்தியை உடைக்கிறோம் அல்லது மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என பொருள் கொள்ளப்படும். படப்பிடிப்பு விபத்து, நடிகரின் திடீர் வருகை, அரசியல் தலைவர்களின் முக்கிய பேச்சு, தீவிபத்து, சூறாவளி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் என அவை ஒன்று போல இருக்காது.

ஆனால் இந்நிலையில் ஊடகங்கள் இடையே முதல் முதலில் யார் அந்த கதையை, ஒரு செய்தியை சொல்வது என்பதில் போட்டி நிலவுகிறது செய்திகளை உடனுக்குடன் தருகிறேன் என்கிற பெயரில் ஏற்கனவே மிகவும் குழப்பமானதாக இருக்கும் ஒரு செய்தியை மிகவும் குழப்பமானதாக மாற்றும் நிகழ்வாக இருக்கிறது. சில சமயங்களில் முந்தி செய்திகளைத் தருகிறேன் என்று ஒரு தகவலை சொல்லி விட்டு பின்னர் அது தவறாகும் பட்சத்தில் அது அவ்வாறு இல்லை என மாற்றிப் பேசும் நிகழ்வுகளும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பிரேக்கிங் நியூஸ் மற்றும் தற்போதைய ஜர்னலிசம் குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை இட்டுள்ளார். அதில், இப்போதெல்லாம் கிசுகிசு என்பதற்கும் செய்திகள் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் செய்தியாளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இங்கு யார் முதலில் அந்த செய்தியை சொல்கிறார்கள் என்பதை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது தவிர உண்மையான செய்தி எது என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Exit mobile version