காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன்- புதிய ஹீரோ யார் தெரியுமா?

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இதில் பல பிரபலமான சீரியல்கள் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. மேலும் இந்த சீரியல் இளைஞர்களை கவரும் வகையில் கல்லூரியில் நடக்கும் ஒரு கதையை களமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் தர்ஷனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளார்கள், அவருக்கு என்று தனி ரசிகர்கள் இன்ஸ்டாராகிராம் பக்கம் தொடங்கி நிறைய புகைப்படங்கள், வீடியோ எடிட் எல்லாம் பதிவிடுவார்கள்.

மேலும் இப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ள அவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதால் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இதற்கு முதல் அரண்மனைக்கிளி என்ற சீரியலிலும் கதாநாயகனாக நடித்தவர்.

மேலும் இந்த நிலையில் அவருக்கு பதில் இனி சூர்யாவாக காற்றுக்கென்ன வேலி சீரியலில் சுவாமிநாதன் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தர்ஷனின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Exit mobile version