கைலாஸவிற்கு செல்ல விரும்பும் மீரா மிதுன்!!!

தமிழ்நாட்டில் வனிதா விஜய குமாருக்கு அடுத்த படியாக அதிகமாக விவாதிக்க பட்டவர் என்றால் அது நமது மீரா மிதுன் தான்.

ஏற்கனவே நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை வம்பிழுத்து அவர் ரசிகர்களிடம் நன்றாக வாங்கிகொண்டார், அதன் பிறகு வெப் சீரியஸில் நடிக்க போகிறேன் என டெல்லிக்கு சென்ற அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது சர்ச்சைகளை கிளப்பி கொண்டு இருக்கிறார். அதற்கு சமூக தள வாசிகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மணி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பிய கைலாச நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவை பாராட்டி,தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில்:

“அனைவரும் அவரை கேலி செய்தார்கள், அனைவரும் அவரை தவறாக பேசினார்கள். அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் அவரோ கைலாசா எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version