தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் கமலின் 233வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி கமல்ஹாசனின் “கேஎச்233” படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளார் என ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளர் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக கமலை இயக்கும் ஹெச்.வினோத்
-
By mukesh

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026