எப்படி இருக்கும் ‘விக்ரம்’ பட டிரெய்லர்? பதில் சொன்ன படக்குழு..!!

Vikram Movie
kamal hassan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படங்களில் ஒன்று விக்ரம். கமல்ஹாசன் முதன்மை கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் மட்டும் வெளிவந்துள்ளன. தற்போது படத்தின் டீசர் தொடர்பான அறிவிப்பை ராஜ்மல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி விக்ரம் படத்தின் டீசர் வரும் 15-ம் தேதி வெளிவருகிறது. அதேநாளில் படத்தின் பாடல்களும் வெளிவரவுள்ளன. இந்த படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version