மறைந்த பழம்பெரும் சினிமா நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்துக் கொண்டு தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் தான் நாக் அஸ்வின். இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என பெயரிடப்பட்டு வந்தது. நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார். நாக் அஸ்வின் தற்போது பிரபாஸ் கதாநாயகான நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பிரபல நட்சத்திர பட்டாளம் நடிக்க இருக்கின்றனர். ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ள இப்படம் குறித்த தகவல்கள் எல்லாம் வெளிவந்த வண்ணம் உள்ளன இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லனாகி கலக்கப்போகும் கமல்!
-
By mukesh
Related Content
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
By
mukesh
July 6, 2023
ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து!
By
mukesh
July 4, 2023
சேலத்திற்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
By
mukesh
July 3, 2023
இன்றும் விலை உயர்வை கண்டது தக்காளி
By
mukesh
July 3, 2023