’’என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்’’- கமல்ஹாசன் டுவீட்

ஏபிஜே அப்துல்கலாமுக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்.

இந்தியா முழுவதும் அப்துல்கலாமின் பிறந்தநாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள்,கல்வியாளார்கள், மாணவர்கள் உள்ளிட்ட பகரும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும்,  மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரன் அப்துல்கலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version