நடிகை கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… முதல் பாடல் டீசர் ரிலீஸ்

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தலைவி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான மழை மழை பாடலின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version