கரீனா கபூர் – சைஃப் அலி கானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது

பாலிவுட்டின் பிரபலமான தம்பதி கரீனா கபூர் – சைஃப் அலி கானுக்கு இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


ஆகஸ்ட் 2020-ல், கரீனாவும் சைஃப் அலி கானும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தாங்கள் இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறோம் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று இரவு மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரீனா கபூர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டில் தைமூர் அலி கான் என்ற முதல் குழந்தை பிறந்தது.தங்களது இரண்டாவது குழந்தையின் வருகைக்கு முன்னதாக, சைஃப் அலிகானும் கரீனாவும் ஒரு பெரிய வீட்டிற்கு சென்றனர். அதில் ஒரு நூலகம், அழகான மொட்டை மாடி, ஒரு நீச்சல் குளம், புதிதாகப் பிறந்தவருக்கும் தைமூர் அலிகானுக்குமான சிறப்பு நர்சரி உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

Exit mobile version