கே.ஜி.எஃப் பட பிரபலம் உயிரிழப்பு..!!

KGF Movie

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த மோகன் ஜூனேஜா உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன் ஜூனேஜா. கன்னடத்தை தவிர இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். இதுவரை அவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய திடீர் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மோகன் ஜூனேஜாஇன் மறைவுக்கு திரையுலக பிரபலகங்கள் மற்றும் ரசிகர் பட்டாளம் இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.இன்று மாலை அவருடைய இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

Exit mobile version