தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என தன்னுடடைய ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான நடிகை நயன்தாரா சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வீடுகள் இருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடி மற்றும் ஹாட் டாபிக் என்றால் அது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி தான். ‘ரெண்டு பேரும் எப்பக் கல்யாணம் செய்துக்கப் போறாங்க’ன்னு நயன்தாராவின் ரசிகர்களைத் தாண்டி சினிமாப் பிரபலங்களுமே ஆவலோடு காத்திருக்காங்க. இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன் தாராவே சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆனா இப்போதைக்கு கையில 6 படங்களுடன் பிஸியாக இருக்காங்க நயன்தாரா. ‘கனெக்ட்’னு ஒரு படம் ஷூட் இப்பதான் தொடங்கியிருக்கு. விக்னேஷ் சிவன் டைரக்ஷன்லயே ஒரு படத்துல நடிக்கிறாங்க. தவிர மலையாளத்துலயும் சில படங்களின் ஒர்க் போயிட்டிருக்கு. இப்படிப் பரபரப்பா ஓடிகிட்டு இருக்கிறதால கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகுதான் கல்யாணம் நடக்கும் எனத் தெரிகிறது.
ஆனா திருமணம் முடிஞ்சதும் சென்னையில வசிக்க அமைதியான சூழல்ல ஒரு வீடு வேணும்னு ரெண்டு பேருமே ஆசைப்பட்டதாத் தெரியுது.
இந்நிலையில் சென்னையின் பிரபல கட்டுமான நிறுவனம் போயஸ் கார்டனில் எழுப்பி வரும் அந்த பிரமாணடமான அபார்ட்மென்ட் நயனுக்கு ரொம்பவே பிடிச்சு போயிருக்கு.
போய் பார்த்த நயனுக்கு அந்த இடம் பிடித்துப்போக உடனடியாக ஒன்றல்ல, இரண்டு பிளாட்களை புக் செஞ்சிருக்காங்க நயன். ரெண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது.
இப்ப அந்த அபார்ட்மெண்ட் சீக்கிரம் முடியற நிலையில இருக்கறதால, விரைவிலேயே அதாவது கைவசம் இருக்கிற படங்களை முடிச்சு கல்யாணமும் முடியறப்ப குடியேற வீடும் தயாரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.