நந்தா திரைப்படத்தில் லோடுக்கு பாண்டியாக அறிமுகமாகி பின்னர் இன்றுவரை காமெடியில் கலக்கி வருபவர் நடிகர் கருணாஸ்.
தான் நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர் அடுத்தடுத்த படங்களில் பல உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து இப்போது முன்னணி காமெடி நடிகராக வலம்வந்து கொண்டு இருக்கிறார்பல வருடங்கள் காமெடியில் கலக்கிய அவர் பின்னர் ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்தார். அப்படி நடித்த ஒரு சில படங்களான திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் முழு ஹீரோவாக நடித்திருந்தார், சொல்லப்போனால் அந்த திரைப்படங்களும் ஓரளவுக்கு நன்றாக வசூலை பெற்றது.
அதன் பிறகு முழு நேர அரசியலில் நுழைந்த இவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின்னர் சில படங்களில் தோன்றினார். இந்நிலையில் மீண்டும் அவர் கதாநாயகன் அவதாரம் எடுக்க வுள்ளார், அந்த படம் திண்டுக்கல் சாரதி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது அந்த படத்தில் லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது, அதுமட்டுமில்லாமல் சில புகைப்படமும் வெளியானது. ஆனால் இதனை மறுத்த லட்சுமி மேனன் அது கொம்பன் படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியுள்ளார்.