மறைந்த நடிகர் சிரு சர்ஜா மற்றும் மேகனாராஜ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிரு சர்ஜா தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தவர், இவரது தம்பி துருவ் சர்ஜாவும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார் .ஆக்சன் கிங் அர்ஜுன் இவர்களுக்கு தாய்மாமா ஆவார்.
இவரும் நடிகை மேகனா ராஜும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
மேகனா ராஜ் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கும் போது அவரது கணவர் சிரு சர்ஜா கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மேகனா ராஜ்க்கு மிகவும் கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது.
ரசிகர்கள் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் இவருக்கு பிறக்கும் போகும் குழந்தையின் வரவிற்காக எதிர்பார்த்திருந்தனர். சிரு சர்ஜாவே மீண்டும் குழந்தையாக பிறக்க போகின்றார் என சொல்லிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இன்று சிரு சர்ஜா மற்றும் மேகனா ராஜ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.