கைதி திரைப்படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து விட்டார் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மிக பிரமாண்டமாக நடைபெற்றது அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்ற பேச்சு அடிபட்டது.இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே,டொரண்டோ திரைப்பட விழாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையிடப்பட்டது. அப்போது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் செய்தியாளர்கள் “கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படம்…” பற்றி லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது
“இப்போதைக்கு இது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன். மற்ற விஷயங்களைத் தயாரிப்பு தரப்பு தான் முடிவு செய்ய வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என நினைக்கிறேன்” என லோகேஷ் கனகராஜ் கூறினார்.