தனுஷ் படத்திற்கு கதை எழுதும் பாடலாசிரியர்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு பிரபல பாடலாசிரியர் திரைக்கதை எழுதுகிறார்.

‘துருவங்கள் 16’, ‘மாஃபியா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் தனுஷின் 43வது படம்.

இதில் மாளவிகா மோகனன் நடிக்க படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. இதில் தற்போது திரைக்கதை வசனம் எழுத பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த விஷயம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்2’, ‘அட்ரங்கி ரே’ என அடுத்தடுத்து படங்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளதால் ‘டி43’ எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Exit mobile version