மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில்,’மாவீரன்’ படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஆடியோ லான்ச் வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகிறது “மாவீரன்” படக்குழு
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025