
மலையாள சினிமாவின் பிரபல நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞருமான ஸ்ரீனிவாசன் இருதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான வினித் ஸ்ரீனிவாசனின் தந்தை ஸ்ரீனிவாசன். சென்னை திரைப்பட கல்லூரியில் நடிப்புப் பயிற்சி மேற்கொண்ட இவர், மலையாள சினிமாவின் நடிகராக மட்டுமில்லாமல் கதையாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மையுடன் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இருதய பிரச்னை காரணமாக அங்கமாலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்ரீனிவாசன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதரய குழாயில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது.
ஏஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல்நிலை மேலும் நலிவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது ஸ்ரீனிவாசனுக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மலையாள சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே கலையுலகம் மிகுந்த சோகத்தில். இதனால் நடிகர் ஸ்ரீனிவாசன் விரைவி குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள், உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
