இணையத்தை கலக்கும் மாஸ்டர் படத்தின் “குய்ட் பண்ணுடா ” பாடல்: இது வேற லெவல் போங்க….

இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் விதமாக மாஸ்டர் குழு புது பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.பல முன்னணி திரை பிரபலங்களின் திரைப்படங்கள் ஓ.டி.டி யில் வெளியாகும் நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் படமும் ஓ.டி.டி யில் வெளியாகும் என்று தகவல் பரவிய நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முற்றிலும் மறுத்து திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று உறுதி அளித்தார்.

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. எனவே மாஸ்டர் படத்தின் டிரெய்லர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து ஏற்கனவே படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அந்த படத்தின் வாத்தி ரைடு, வாத்தி கம்மிங் ஒத்து, குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்கள் இணையத்தில் பட்டைய கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இன்று தன்னுடைய 30 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பரிசளிக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் இருந்து “குய்ட் பண்ணுடா ” பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி,இசையமைப்பாளர் அனிருத் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

Exit mobile version