மாஸ்டர் படம் டீஸர் எப்போது வெளியீடு தயாரிப்பாளர் ட்வீட்…..

லோகேஷ் கனகராஜ் இயக்கி தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் மற்ற கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட் செம , இசை வெளியீடும் மிக பிரமாண்டமாக நடந்தது ஏப்ரல் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது.

இதனிடையே ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக வதந்திகள் கசிந்தன. ஆனால் படக்குழு அதை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. திரை அரங்ககங்கள் திறக்கும் வரை ரசிகர்கள் காத்து இருக்க வேண்டும் இதனிடையே வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தாலும் அந்தந்த மாநிலங்களின் முடிவே இறுதியானது என சொல்லிவிட்டது அதனால் தமிழக அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுமா என்பது தெரிய வரும்.

இந்நிலையில் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், “‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும்” என்று ட்வீட் பதிவு செய்யப்பட்டது.

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் பலர் அந்த ட்விட்டர் கணக்கை போலியானது என்று கமெண்ட் பதிவிட, ஒரு சிலரோ போலியான பக்கமாக இருந்தாலும் நல்ல அப்டேட் கொடுத்திருக்கிறார்களே என நகைச்சுவையாக பதிலளித்துள்ளனர். மேலும் இப்பதிவை 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

Exit mobile version