‘மாஸ்டர்’ பொங்கல் கொண்டாட்ட வீடியோ வெளியிட்ட படக்குழு!

‘மாஸ்டர்’ பொங்கல் கொண்டாட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் ஒரு வருடம் கழித்து வெளியாகியிருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் என்பதால் திரையரங்குகள் மீட்சிக்கு இது முதல் படியாக இருக்கும் என ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எதிர்ப்பார்த்தது போலவே, ‘மாஸ்டர்’ பல தரப்பிலும் நல்ல விமர்சனங்களோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து கடந்த வருடம் ‘மாஸ்டர்’ படக்குழுவினர் சம்மர் ரிலீஸாக திட்டமிட்டு இருந்தனர்.

READ MORE- ‘மாஸ்டர்’ முதல் நாள் வசூல் என்ன?

இதனை ஒட்டி கடந்த வருட பொங்கலின் போது படக்குழு மொத்தமாக பொங்கல் வைத்து ‘மாஸ்டர் பொங்கல்’லாக கொண்டாடி இருந்தனர். இந்த வீடியோவை படக்குழு தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/XBFilmCreators/status/1349944812829511680
Exit mobile version