சமூக வலைதளத்தில் நடிகை வனிதாவுக்கு பிறகு அதிகமாக பேசப்பட்ட பெண் என்றால் அது நமது மீரா மிதுன் தான் நெகடிவ் பப்ளிசிட்டி மூலம் அம்மணி பெரிய இடத்துக்கு போகும் கனவில் அனைவரிடமும் நல்ல வாங்கி கட்டி கொண்டார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் கிடைக்காததால் அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயங்களை பேசி வந்தார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து பேசி ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
விஜய் மற்றும் அவரது தந்தை கோலிவுட்டின் மாபியா என்று விஜய் ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கொண்டார்.பிறகு சூர்யா மற்றும் ஜோதிகாவை சீண்டினார் சூர்யாவின் ரசிகர்களும் சும்மாவா விடுவார்கள் அம்மணியை கிழி கிழி யேன கிழித்து தொங்க போட்டு விட்டனர்.
அதற்கு எல்லாம் மேலாக இயக்குனர் பாரதிராஜாவும் மீரா மிதுனை கண்டித்து ட்வீட் செய்தார். மேலும் சூர்யா மற்றும் விஜய் தரப்பு மீரா மிதுனை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை, அம்மணிக்கு பெரியதாக போனியாகாதலால் டெல்லியில் சென்று ஒரு புதிய வெப் தொடரில் நடிப்பதாக கடந்த சில தினங்களாக கூறி இருந்தார். மற்ற விஷயத்தில் இவர் விடும் கப்ஸா போலவே இதுவும் எதாவது பப்லிசிடிக்காக தான் இருக்கும் என்று பலரும் நினைத்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன், ட்ரீமி நைட் என்ற வெப் தொடரில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், அந்த வெப் சீரிஸிலிருந்து, அரை குறை ஆடையில் இருக்கும் சில புகைப்படங்களை வீடியோகளையும் வெளியிட்டு உள்ளார். இதை பார்க்கும் போது இது ஏதோ 18+ வெப் சீரிசாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பார்த்த நெட்டீசன்கள் அம்மணியை கிண்டல் செய்து வருகின்றனர்.