இணையம் அதிரும் COMMON DP.. சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அமர்க்களம்

ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகை கடந்து உலக அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர், 45 ஆண்டுகால ரஜினியின் திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பொதுவான CDP-ஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரஜினி திரையுலகில் கடந்து வந்த பாதையை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், அவரது ரசிகர்கள் “தலைவா” எனும் வாசகம் அடங்கிய பதாகைகளையும், ரசிகர் மன்ற கொடியையும் எந்தியாவறு திரளாக இடம் பெற்றுள்ளனர்.

அதற்கு, மத்தியில் ரஜினிக்கே உரித்தான ஸ்டைலான கெத்தான லுக்கில், காலா படத்தில் வரும் காலரை தூக்கி விடுவது, எந்திரன் -2ல் வந்த சிட்டி ரோபோ, சிவாஜியில் வரும் மொட்டை பாஸ் ரஜினி, டான் பாட்ஷா மற்றும் அன்புள்ள ரஜினி போன்ற வின்டேஜ் முதல் தற்போதைய ட்ரெண்ட் வரையிலான கலக்கலான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே இணையம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

 

Exit mobile version