நடித்து முடித்துள்ள அனைத்து படத்தையும் ஓடிடியில் வெளியிடும் மோகன்லால்!!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவர் நடித்த ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அறிவித்து உள்ளார்.

இதுதவிர ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் ‘புரோ டாடி’, ‘ட்வெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குனர் இயக்கும் படம் என மேலும் 4 படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட அதிரடி முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படங்களை தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version