எப்பொழுது வெளியாகும் – மனி ஹீஸ்ட் இறுதி சீசன் ?

நெட்ப்ளிக்ஸில் மிகப்பெரிய ஹிட் தொடராக கொண்டாடப்படுபவைகளுள், கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்திய மனி ஹீஸ்ட்டும் (Money Heist) அடங்கும்.இத்தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. “அலெக்ஸ் ரோட்ரிகோ” இயக்கிய இத்தொடரில் இடம்பெற்ற (the professor) ப்ரொஃபஸர் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

மனி ஹீஸ்ட்- சீசன் 4 கடந்த ஆண்டு நெட்ஃபிக்ஸ் இல் ஊரடங்கு கால கட்டதில் திரையிடப்பட்டது, அனைத்து மொழி பார்வையாளர்களை ஈர்தது , மேலும் இந்தத் தொடரின் இறுதி சீசனாக நடக்கும் சீசன் 5, விரைவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது நெட்ப்ளிக்ஸ் உருவாக்கும் சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், மனி ஹீஸ்டின் 5 ஆம் சீசன் 2021 ஆகஸ்ட் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்கபடுகிறது மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சுற்றுவட்டாரம் கூறுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொடர் படப்பிடிப்பு தாமதமானது, ஆனால் இப்போது ஆகஸ்ட் மாத வெளியீட்டிற்கான பாதையில் உள்ளது என தொடர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version