நடிகர் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கவுள்ளார்.

அயோக்யா படத்துக்குப் பிறகு விஷால் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்தது. கரோனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.இதனிடையே விடுபட்ட சில காட்சிகளை தற்போது படமாக்கி உள்ளனர். இதற்காக 6 நாட்கள் படப்பிடிப்பை விஷால் முடித்துவிட்டார்.
இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருக்கிறார். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.