முன்னாள் மனைவி மீது பாஸ்போர்ட் முறைகேடு புகார்- டி. இமான் பரபரப்பு

imman with his wife monica
d. imman with his wife monica

குழந்தைகளுக்கு பாஸ்போர்டு பெறுவது தொடர்பாக முன்னாள் மனைவி மோனிகா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் டி. இமான் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த மோனிகா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி மனைவியை விவகாரத்து செய்வதாக டி. இமான் அறிவிப்பு வெளியிட்டார். இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இவர்களுடைய பிரிவு குறித்த காரணம் எதுவும் தெரியவில்லை.

விரைவில் டி. இமான் இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் முன்னாள் மனைவி மோனிகா மீது நீதிமன்றத்தில் டி. இமான் புகார் கூறியுள்ளார்.

அதில், தன் 2 குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து, புதியதாக பாஸ்போர்ட் பெற்ற மோனிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இமான் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, இந்த புகார் குறித்து மோனிகா பதில் அளிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கு விசாரணை ஜூன் மாதம் 9-ம்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக கூறினார்.

Exit mobile version