நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் டும்!டும்!டும்!

தமிழில் பழனி படம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை காஜல் அகர்வால். அந்த படத்தில் பெரியதாக பேசப்படவில்லை என்றாலும் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளி வந்த மகதீரா திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு தெலுங்கு ,கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் .தமிழில் ரஜினிகாந்த் தவிர மற்ற எல்ல கதாநாயகர்களுடன் கிட்ட தட்ட ஜோடி போட்டுவிட்டார். சினிமா துறைக்கு வந்த பின் அவசரப்படாமல் கதைகளை பொறுமையாக தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் காஜல் அகர்வால்.

தற்போது இவருக்கு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை இருந்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் இவர் அனைத்து மொழி சினிமா உலகிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறப்பாக வலம் வருகிறார்.

இப்படி சினிமா உலகில் மிக பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால்.திடீரென திருமணம் செய்ய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது பிரபல தொழிலதிபரான கௌதம் என்பவரை நிச்சயம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் வாங்கி உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

Exit mobile version