காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நாஞ்சில் விஜயன் புகார் ,
பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் நடிகரான நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல்நிலைய இனஸ்பெக்டர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயன், சமீபத்தில் வனிதா விஜயகுமார் திருமண விவகாரம் குறித்து சூர்யா தேவியை தனது யூடியூப் சேனலில் பேட்டிகண்டார்.
இந்தப்பேட்டிக்கு பின் சூர்யாதேவிக்கு எதிர்ப்புகள் குவிந்ததாகத் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த சூர்யா தேவி 3 பேருடன் நாஞ்சில் விஜயனின் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
பின்னர் அங்கிருந்த தப்பிச் சென்ற நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜயன் சூர்யா தேவிக்கு ஆதரவாகச் செயல்படுகிறவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தற்போது வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.