தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா இவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஒரு படத்திற்க்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்றவாறு, 3முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார், நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்க, விக்னேஷ் சிவனும் படம் இயக்குவதோடு, தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அடிக்கடி வெளிநாடு மற்றும் கோயில்களுக்கு சென்று இந்த ஜோடி தங்கள் புகைப்படங்களை சமூக வலைததளத்தில் பதிவிட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
என்ன தான் உலகத்தை சுற்றி மகிழ்ச்சியாக இருந்தாலும், நயன்தாராவின் திருமணம் செய்து கொள்வதில் ஜாதகத்தில் ஏதோ சிக்கல் இருக்கிறதாம். இதனால்தான் அவர் விக்னேஷ் சிவனுடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறாராம்.
அப்படி பல கோவிலுக்கு சென்றாலும், இன்னும் ஒரே ஒரு கோவில் மட்டும் மிச்சம் இருக்கிறதாம் ஆனால், தற்போதைய கொரோனா ஊரடங்கினால் அந்த கோவிலுக்கு நயனால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறதாம், இந்த கோவிலுக்கு விரைவில் சென்றவுடன் நயன்தாரா -விக்னேஷ் சிவனை மணமேடையில் பார்க்கலாம்.