நயன்தாராவை ஓடிடியில் இறக்கிய ஆர்.ஜே.பாலாஜி.. மூக்குத்தி அம்மன் படத்துக்கு வந்தநிலை?

“மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை, ஆர்.ஜே.பாலாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஊரடங்கிற்கு முன்பாகவே நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். இதில் நயன்தாரா முதல்முறையாக அம்மனாக நடித்துள்ளார். ஆனால், பெயருக்கு ஏற்றார்போல் பக்தி படமாக இல்லாமல், இன்றைய சூழலின் அரசியல், உண்மைச் சம்வங்கள் ஆகியவற்றை தொட்டுச் செல்லும் இரு ஜனரஞ்ச்க படமாக இது அமையும் என கூறப்படுகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சனையால் மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு திரையுலகத்தினர்
பதிலின்றி தவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய்சேதுபதியின் க/பே. ரணசிங்கம் போன்ற
முன்னணி வீரர்களின் படங்களே ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, சில படங்கள் ரிலீஸாகியும் விட்டன.

அந்த வகையில், மூக்குத்தி அம்மனும் ஓடிடியில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஹாட்ஸ்டாரில் விரைவில் படன் வெளியாகும் என பல்வேறு தகவல்களும் வெளியாகின. அந்த தகவலை தற்போது ஆர்.ஜே. பாலாஜி உறுதி செய்துள்ளார். மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பல முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகளின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவது திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்கள் இடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version