ஏடாகூடமான கதை… நடிக்க மறுத்த நயன்தாரா?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா தென்னிந்தியாவில் இவர் காட்ஷீட்டுக்காக நிறைய டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்கள் இவர் வீட்டில் காத்துகொண்டு இருக்கின்றனர். ஒரு படத்திற்கு சராசரியாக 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
Nayanthara Hot Wet Photos in Arrambam

நயன்தாரா எந்த அளவுக்கு பிரபலமோ அதே போல் சர்ச்சைகளுக்கும் பிரபலமாக இருக்கிறார் முக்கியமாக இவரின் காதல் விவகாரம் கிசு கிசு எழுதுபவர்களுக்கு பெரும் தீனி போடுகிறது இவர் காதல் விவகாரம், சிம்பு நயன்தாரா, பிரபுதேவா நயன்தாரா வரிசையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா எனும் அளவுக்கு மாறி உள்ளது.


விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒரு கள்ளக்காதல் சம்பந்தப்பட்ட கதையில் நடிப்பதற்கான வாய்ப்பு நயன்தாராவை தேடி வந்துள்ளது.

தெலுங்கில் சமீபத்தில் பீஷ்மா என்ற வெற்றி படத்தை கொடுத்த நிதின் சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் படமொன்றில் நயன்தாராவை திருமணத்திற்கு பிறகு வேறொரு ஆணுடன் கள்ளக்காதல் கொண்ட பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்காக அவருக்கு 4 கோடி வரை சம்பளம் பேசி விட்டார்களாம். ஆனால் நயன்தாராவுக்கு இந்த படத்தில் நடிக்க சுத்தமாக விருப்பம் இல்லையாம். இந்த படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதால் வருத்தத்தில் உள்ளது படக்குழு.

Exit mobile version